பிப்ரவரி-4, இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் போட்டி தொடருக்கான இந்திய அணியில் சுழற்பந்து வீச்சாளர் வருண் சக்கரவர்த்தி சேர்க்கப்பட்டுள்ளார்.
அண்மையில் நடந்து முடிந்த இங்கிலாந்துக்கு எதிரான டி-20 போட்டி தொடரை இந்திய அணி 4-1 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. இத்தொடரில் சிறப்பாக பந்து வீசிய சுழற் பந்துவீச்சாளர் வருண் சக்கரவர்த்தி மொத்தம் 14 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இந்த சிறப்பான பந்துவீச்சைந் தொடர்ந்து ஒரு நாள் கிரிக்கெட் போட்டிக்கான இந்திய அணியில் முதன் முறையாக வருசக்கரவர்த்தி சேர்க்கப்பட்டுள்ளார். இதன்மூலம் இங்கிலாந்துக்கு எதிரான ஒரு நாள் போட்டிக்கான இந்திய அணியில் குல்தீப் யாதவ், அக்ஸர் படேல், வாஷிங்டன் சுந்தர் ஆகியோருடன் சுழல் பந்துவீச்சுக்கு வருண் சக்கரவர்த்தியும் வலு சேர்ப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
🚨 𝗡𝗘𝗪𝗦 🚨
— BCCI (@BCCI) February 4, 2025
Varun Chakaravarthy added to India’s squad for ODI series against England.
Details 🔽 #TeamIndia | #INDvENG | @IDFCFIRSTBank
சாம்பியன்ஸ் கோப்பை தொடருக்கு முன்பாக இந்திய அணி பங்கேற்கும் இத்தொடரில் வருண் சக்கரவர்த்தி சேர்க்கப்பட்டுள்ளது மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. கடந்த ஆகஸ்ட் மாதத்திற்கு பிறகு இந்திய அணி ஒருநாள் போட்டி தொடர் இங்கிலாந்துக்கு எதிராக பங்கேற்க உள்ளது. வரும் 6 ஆம் தேதி நடைபெறும் முதல் போட்டியில் இந்திய அணி நாக்பூரில் இங்கிலாந்தை எதிர்கொள்கிறது.
அகமதாபாத் வரும் 9 ஆம் தேதி நடைபெறும் 2வது போட்டி நடைபெறுகிறது. மூன்றாவது ஒருநாள் போட்டி கட்டாக்கில் வரும் 12 ஆம் தேதி நடைபெற உள்ளது. ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணியில் சுமன் கில் துணை கேப்டனாக செயல்படுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
விராட் கோலி, ஸ்ரேயாஸ் ஐயர், கே எல் ராகுல், ஹர்திக் பாண்டியா, அக்சர் பட்டேல், வாஷிங்டன் சுந்தர், குல்தீப் யாதவ், முகமது சமி, அக்சர் தீப் சிங், யாஷஸ்வி ஜெய்ஸ்வால், ரிஷப் பந்த், ரவீந்திர ஜடேஜா, ஜஸ்ப்ரீத் பும்ரா(3 வது போட்டியிலிருந்து) வருண் சக்கரவர்த்தி, ஹர்ஷித் ரானா( முதல் 2 போட்டிகளுக்கு) ஆகியோர் இங்கிலாந்துக்கு எதிரான தொடருக்கான இந்திய கிரிக்கெட் அணியில் இடம் பெற்றுள்ளனர்.