ஜனவரி-10, வைகுண்ட ஏகாதேசி திருவிழாவின் முக்கிய நிகழ்வான சொர்க்கவாசல் திறப்பு பூலோக வைகுண்டம் என அழைக்கப்படும் ஶ்ரீரங்கம் ரெங்கநாதர் திருக்கோவிலில் இன்று நடைபெற்றது. இதனையொட்டி ஆயிரக்கணக்கான பக்தர்கள் அங்கு குவிந்துள்ளனர்.
108 திவ்ய தேசங்களில் முதன்மையானது திருச்சி ஶ்ரீரங்கம் அருள்மிகு ரெங்கநாதர் திருக்கோவிலாகும். பூலோக வைகுண்டம் என அழைக்கப்படும் இத் திருக்கோவில் ஆண்டுதோறும் வைணவர்களின் முக்கிய திருவிழாவான வைகுண்ட ஏகாதேசி பெருவிழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த 30 ஆம் தேதி தொடங்கியது. பகல் பத்து திருவிழாவில் நம்பெருமாள் பல்வேறு அலங்காரங்களுடன் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
இதனையடுத்து, வைகுண்ட ஏகாதேசி திருவிழாவின் முக்கிய நிகழ்வான சொர்க்கவாசல் திறப்பு பூலோக வைகுண்டம் என அழைக்கப்படும் ஶ்ரீரங்கம் ரெங்கநாதர் திருக்கோவிலில் இன்று நடைபெற்றது.
இதனையொட்டி, ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஶ்ரீரங்கம் கோவிலில் குவிந்துள்ளனர். இதேபோல், முக்கிய வைணவ திருத்தலங்களான திருவல்லிக்கேணி பார்த்தசாரதி திருக்கோவில், திருப்பதி வெங்கடஜாலபதி திருக்கோவில் உள்ளிட்ட முக்கிய திருக்கோவில்களிலும் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி இன்று அதிகாலை நடைபெற்றது.
இதனையொட்டி ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்துள்ளனர்.