பிப்ரவரி-12, இங்கிலாந்துக்கு எதிரான 3 வது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டியில் இந்திய அணி 142 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. அதிரடியாக விளையாடிய சுப்மன் கில் சதம் அடித்து அசத்தினார்.
இரு அணிகளுக்கும் இடையேயான 3வது ஒருநாள் போட்டி குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்றது. இதில், டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பில்டிங் செய்ய தீர்மானித்தது. இந்திய அணியின் தொடக்க வீரர்களாக ரோகித் சர்மா, சுப்மன் கில் ஆகியோர் களமிறங்கினர். கடந்த போட்டியில் அதிரடியாக விளையாடி சதம் அடித்த கேப்டன் ரோஹித் சர்மா ஒரே ஒரு ரன் மட்டுமே எடுத்திருந்த நிலையில் ஆட்டம் இழந்தார்.
இதனை தொடர்ந்து விராட் கோலியுடன் இணைந்து அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார் சுப்மன் கில். விராட் கோலி 52 ரன்கள் எடுத்திருந்ந நிலையில் ஆட்டமிழந்தார். எனினும் சுப்மன் கில் அதிரடியாக விளையாடி 3 சிக்ஸ்ர்கள், 14 பவுண்டரிகள் உட்பட 102 பந்துகளில் 112 ரன்கள் குவித்தார்.

ஸ்ரேயாஸ் ஐயர் 78 ரன்களும், கே.எல்.ராகுல் 40 ரன்களும் எடுக்க இந்திய அணி 50 ஓவர்களில் 356 ரன்கள் குவித்தது. இங்கிலாந்து அணி சார்பில் அடில் ரசித் அதிகபட்சமாக 4 விக்கட்களை வீழ்த்தினார். இதனை தொடர்ந்து 357 ரன்கள் என்ற இலக்குடன் களமிறிய இங்கிலாந்து அணிக்கு பில் சால்ட், பென் டக்கட் நல்ல தொடக்கத்தை ஏற்படுத்திக் கொடுத்தனர்.

எனினும் சால்ட் 23 ரன்களில்மு, டக்கட் 34 ரன்களிலும் அர்ஷதிப் சிங் பந்துவீச்சல் ஆட்டம் இருந்தனர். இதனைத் தொடர்ந்து டாம் பென்டன் 38 ரன்கள், ஜோ ரூட் 24 ரன்களிலும், ஹாரி புரூக் 19 ரன்களும், கேப்டன் பட்லர் 6 ரன்களும், லிவிங்ஸ்டன் 9 ரன்களும் எடுத்தனர். கஸ் அட்கின்சன் 38 ரன்கள் எடுத்தார்.
எனினும், இங்கிலாந்து அணி 34.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 214 ரன்கள் மட்டுமே எடுத்தது. இந்திய அணி தரப்பில் அர்ஷதீப் சிங், ஹர்ஷித் ராணா, அக்ஷர் பட்டேல், ஹர்திக் பாண்டியா ஆகியோர் தலா 2 விக்கெட்களையும், வாஷிங்டன் சுந்தர், குல்தீப் யாதவ் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.

இதன்மூலம் மூன்று ஒருநாள் போட்டிகளைக் கொண்ட தொடரை இந்திய அணி 3-0 ஷிப் என்ற கணக்கில் கைப்பற்றியது. சுப்மன் கில் ஆட்ட நாயகனாகவும், தொடர் நாயகனாகவும் அறிவிக்கப்பட்டார்.