• Tue. Mar 11th, 2025

உரக்கச் சொல்வோம் உலகிற்கு

புஷ்பா 2- தி ரூல் ஹிந்தியில் ரூ.800 கோடி வசூல் சாதனை!

Pushpa-2 The Rule

ஜனவரி-05, புஷ்பா 2- தி ரூல் திரைப்படம் ஹிந்தியில் ரூ.800 கோடி வசூல் சாதனை படைத்துள்ளது.

அல்லு அர்ஜூன், ராஷ்மிகா மந்தானா, பஹத் பாசில் ஆகியோர் முன்னணி வேடங்களில் நடித்துள்ள புஷ்பா-2 தி ரூல் திரைப்படம் கடந்த டிசம்பர் மாதம் 5 ஆம் தேதி வெளியாகி பல்வேறு வசூல் சாதனைகளை நிகழ்த்தி வருகிறது. திரைப்படம் வெளியாகி 4 வாரங்களைக் கடந்துள்ள நிலையிலும் புஷ்பா-2 திரைப்படம் சிறப்பான வசூலைத் தொடர்ந்து வருகிறது.

சுகுமார் இயக்கத்தில் உருவாகியுள்ள புஷ்பா-2 திரைப்படம் ஹிந்தியில் டப்பிங் செய்யப்பட்டு வெளியிடப்பட்டுள்ள நிலையில், தற்போது வரை ஹிந்தியில் மட்டும் 800 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாக படத்தின் தயாரிப்பாளர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஹந்தியில் இச்சாதனையை படைத்துள்ள முதல் திரைப்படம் புஷபா-2 என்றும் அவர்கள் பெருமிதத்துட்டன் தெரிவித்துள்ளனர்.

புஷ்பா-2 திரைப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான மைத்திரி மூவி மேக்கர்ஸ் தங்களது அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இத்தகவலை பகிர்ந்துள்ளனர். இதேபோல், அனைத்து மொழிகளையும் சேர்த்து புஷ்பா-2 திரைப்படத்தின் வசூல் 1800 கோடி ரூபாயைத் தாண்டியுள்ளதாகவும் ஏற்கனவே தகவல்கள் வெளியாகி உள்ளன.

புஷ்பா-2 தி ரூல் திரைப்படத்தில் அல்லு அர்ஜூன் புஷ்பராஜ் கதாபாத்திரத்திலும், ராஷ்மிகா மந்தானா அவரது மனைவியாக ஶ்ரீவள்ளி பாத்திரத்திலும், பஹத் பன்வர்சிங் ஷெகாவாத் கதாபாத்திரத்தில் காவல்துறை எஸ்.பி.யாகவும் நடித்துள்ளனர். புஷ்பா-2 தி ரூல் திரைப்படத்திற்கு கிடைத்த பெரும் வரவேற்பைத் தொடர்ந்து அடுத்ததாக புஷ்பா-3 தி ராம்பேஜ் திரைப்படம் உருவாக உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

 

 

 

By VP

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *