ஜூலை-12, தமிழகத்தைச் சேர்ந்த இளம்பெண் இயற்கையான குளிர்சாதனப் பெட்டியை உருவாக்கி அசத்தலான சாதனை செய்துள்ளார்.
இவரது பெயர் ரமாமணி. சிறு வயதிலிருந்தே ஜில்ஜில்லென்ற பொருட்கள் என்றால் இவருக்குப் பிடிக்கும். குளிர்பதனப் பெட்டி வாங்கும் அளவு வசதி இல்லாத மண்பாண்டங்கள் செய்து விற்கும் குடும்பம். ஆனால் அவர் தளர்ந்து விடவில்லை. தனது கைத்திறமையைப் பயன்படுத்தி இயற்கை முறையில் மின்சாரமே தேவைப்படாத இந்த களிமண் பதனப்பெட்டியை உருவாக்கியுள்ளார்.
இதில் வைக்கப்படும் காய்கறிகள், பழங்கள் வாரக் கணக்கில் கெடாமல் இருப்பதோடு, இந்தப் பெட்டியை உருவாக்க பயன்படுத்தப்பட்ட மண்ணில் இருக்கும் தாதுச் சத்துகள் அவற்றில் எக்கச்சக்கமாக ஏறி உணவை சத்து மிக்கதாக ஆக்குகின்றன. குளிர்பதனப் பெட்டி வாங்க முடியாத வறுமை நிலையைத் தனது திறமையால் வென்றுள்ளார் இந்த சிங்கப் பெண்.