பிப்ரவரி-07, இங்கிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 4 விக்கெட்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
நாக்பூரில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தது. தொடக்க வீரர்களா பில் சால்ட் மற்றும் பென் டக்கட் ஆகியோர் களமிறங்கினர். இங்கிலாந்து அணிக்கு இந்த ஜோடி நல்ல தொடக்கத்தை ஏற்படுத்திக் கொடுத்தது. அதிரடியாக விளையாடிய சால்ட் 26 பந்துகளில் 43 ரன்களையும், டக்கட் 32 ரன்களையும் எடுத்து ஆட்டம் இழந்தனர்.

இதைத்தொடர்ந்து களமிறங்கிய ஜோ ரூட் 19 ரன்களும், ஹாரி புரூக் ரன் எதுவும் எடுக்காமலும் வெளியேறினர். பின்னர் கலம்பெறிய இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜாஸ் பட்லர் சிறப்பாக விளையாடி 52 குவித்தார். அவருக்கு துணையாக நிலைத்து நின்று விளையாடி ஜேக்கப் பெத்தல் 51 ரன்கள் எடுத்தார். இறுதியில் ஜோப்ரா ஆர்ச்சர் 21 ரன்கள் எடுக்க 47 புள்ளி 4 ஓவர்களில் இங்கிலாந்து அணி அனைத்து விக்கெட்களையும் இழந்து 248 ரன்கள் எடுத்தது.
இந்திய தரப்பில் ஹர்ஷத் ரானா மூன்று விக்கெட்ளையும், முகமது சமி, அக்ஸர்பட்டேல் குல்திப் யாதவ் தலா ஒரு விக்கெட்டுகளையும் எடுத்தனர். ரவீந்திர ஜடேஜா சிறப்பாக பந்துவீசி 9 ஓவர்களில் 26 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதனைத் தொடர்ந்து 249 ரன்கள் என்ற இலக்குடன் இந்திய அணி களம் இறங்கியது.

கேப்டன் ரோகித் சர்மா, ஜெய்ஸ்வால் ஆகியோர் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். ரோகித் சர்மா 2 ரன்கள் மட்டுமே எடுத்து வெளியேறினார். ஜெய்ஸ்வால் 15 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டம் இழந்தார். இதனைத் தொடர்ந்து சும்மன் கில், ஸ்ரேயாஸ் ஐயர் இணை இந்திய அணிக்கு வலுவான நிலையை ஏற்படுத்திக் கொடுத்தது. ஸ்ரேயாஸ் ஐயர் அரைசதம் அடித்து 59 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார்.

பின்னர் சும்மன் கில்லுடன் ஜோடி சேர்ந்த அக்சர் பட்டேல் 52 குவித்தார். சிறப்பாக விளையாடிய சுமங்கில் 96 பந்துகளில் 14 பவுன்றுகள் உட்பட 87 ரன்கள் எடுத்து இந்திய அணியின் வெற்றிக்கு வித்திட்டார். இந்திய அணி 38.4 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை மட்டுமே எடுத்து 251 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இதனைத் தொடர்ந்து, மூன்று போட்டிகளைக் கொண்ட ஒரு நாள் தொடரில் இந்திய அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

சிறப்பாக விளையாடிய சுப்மன் கில் ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார். இந்தியா- இங்கிலாந்து இடையேயான 2 வது ஒருநாள் போட்டி அகமதாபாத்தில் வரும் 9 ஆம் தேதி நடைபெற உள்ளது. 3 வது ஒருநாள் போட்டி கட்டாக்கில் வரும்12ஆம் தேதி நடைபெற உள்ளது.