ஜனவரி-10, தெலுங்கு ஸ்டார் ராம் சரண் நடிப்பில், ஷங்கர் இயக்கத்தில் வெளியாகியுள்ள கேம் சேஞ்சர் திரைப்படம் முதல் நாளில் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இத்திரைப்படம் முதல் நாளில் பாக்ஸ் ஆபிஸில் 100 ரூபாயை கடந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
ராம் சரண் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்க, அவருக்கு ஜோடியாக கியாரா அத்வானி நடித்துள்ளார். எஸ்.ஜே.சூர்யா, அஞ்சலி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிப்பை வெளிப்படுத்தி உள்ளனர். ஏறக்குறைய 4 ஆண்டுகள் தயாரிப்பு பணிகளுக்குப் பிறகு நேரடி தெலுங்கு திரைப்படமாக வெளியாகியுள்ள கேம் சேஞ்சர், தமிழ், ஹிந்தி உள்ளிட்ட மொழிகளிலும் டப்பிங் செய்யப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது.
6 ஆண்டுகளுக்குப் பிறகு ராம் சரண் தனி ஹீரோவாக நடித்து வெளியாகியுள்ள இத்திரைப்படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார். ஐஏஎஸ் அதிகாரியாக ராம் நந்தன் என்ற கதாபாத்திரத்தில் ஊழலுக்கு எதிராகப் போராடும் அதிகாரியாக ராம்சரண் நடித்துள்ளார்.
ஐஏஎஸ் அதிகாரியாகவும், கிராமத்து இளைஞனாகவும் ராம்சரண் நடிப்பில் அசத்தியுள்ளார். ராம் நந்தன்( ராம் சரண்) அம்மாவாக பார்வதி கதாபாத்திரத்தில் நடித்துள்ள அஞ்சலியின் நடிப்பு பார்வையாளர்கள் உணர்ச்சிவசப் படுத்தும் வகையில் சிறப்பாக அமைந்துள்ளது.
தமனின் இசையமைப்பு, திருவின் ஒளிப்பதிவு ஆகியவை இத்திரைப்படத்திற்கு பலத்தை சேர்த்துள்ளன. இந்தியன்-2 திரைப்படத்தில் இழந்த தனது இமேஜை இத்திரைப்படத்தின் மூலம் தூக்கி நிறுத்தியுள்ளார் டைரக்டர் ஷங்கர். உலகமும் முழுவதும் 6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட திரைகளில் வெளியாகியுள்ள கேம் சேஞ்சர் திரைப்படம் முதல் நாளில் 100 கோடி ரூபாய் வசூலைத் தாண்டியுள்ளதாகவும் தகவல்கள்