ஜனவரி-13, ராம் சரண் நடிப்பில் வெளியாகியுள்ள கேம் சேஞ்சர் திரைப்படம் 3 வது நாளில் ரூ.17 கோடி வசூலித்துள்ளது.
பிரம்மாண்டத்திற்கு பிரபலமான ஷங்கர் இயக்கத்தில் தெலுங்கில் நேரடி திரைப்படமாக வெளியாகியுள்ளது கேம் சேஞ்சர். ராம் சரண் கதாநாயகனாகவும், கியாரா அத்வானி, எஸ்.ஜே.சூர்யா, அஞ்சலி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களிலும் நடித்துள்ள இத்திரைப்படம் கடந்த வெள்ளிக்கிழமை வெளியானது. மகர சங்கராந்தி மற்றும் பொங்கலையொட்டி இந்தி, தெலுங்கு உள்ளிட்ட மொழிகளிலும் வெளியாகியுள்ள இத்திரைப்படம் 3 வது நாளான ஞாயிற்றுக்கிழமை அனைத்து மொழிகளையும் சேர்த்து மொத்தம் 17 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஒட்டுமொத்தமாக 3 நாட்களில் இத்திரைப்படம் 90 கோடி ரூபாயை நெருங்கியுள்ளது. இந்தியில் மொழிபெயர்ப்பு செய்து வெளியாகியுள்ள இத்திரைப்படம் 3 நாட்களில் 23 கோடி ரூபாயை வசூலித்துள்ளது.
ஐஏஎஸ் அதிகாரியாகவும், கிராமத்து இளைஞனாகவும் ராம்சரண் இப்படத்தில் நடித்துள்ளார். அவரது மனைவியாக கியாரா அத்வானி நடித்துள்ளார். ராம் நந்தன்( ராம் சரண்) அம்மாவாக பார்வதி கதாபாத்திரத்தில் நடித்துள்ள அஞ்சலியின் நடிப்பு பார்வையாளர்கள் கவர்ந்துள்ளது. தமன் இத்திரைப்படத்திற்கு இசையத்துள்ளார்.