ஜனவரி-16, ஒரு கட்சிக்கு எதிரானது அல்ல எனது போராட்டம், நாட்டுக்கு எதிரானது என காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி பேசியிருப்பது மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
நாடாளுமன்றத் தேர்தலில் தொடர்ந்து 3 வது முறையாக தோல்வி அடைந்து ஆட்சியை பிடிக்க முடியாத நிலை ஏற்பட்டதில் இருந்து, காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரும், மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி சர்ச்சைக்குரிய கருந்துக்களை தொடர்ந்து பேசி வருகிறார். குறிப்பாக மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா கட்சிக்கும், ஆர்.எஸ்.எஸ். அமைப்புக்கும் எதிராக தொடர்ந்து கருத்துக்களை வெளியிட்டு வருகிறார்.
இந்நிலையில், இந்தியா என்பது மாநிலங்களின் கூட்டமைப்பே தவிர, தனி நாடு அல்ல என்பதுபோல் ராகுல் காந்தி இன்று மீண்டும் கருத்து தெரிவித்துள்ளார். தான் போராடி வருவது ஒரு குறிப்பிட்ட கட்சிக்கு எதிரானது அல்ல என்றும், நாட்டுக்கு எதிரானது என்றும் பேசியுள்ளார்.
பாரதிய ஜனதா கட்சியும், ஆர்.எஸ்.எஸ். இயக்கமும் இந்திய அரசியலமைப்பு சட்டத்துக்கு எதிராக செயல்பட்டு வருவதாகவும், அரசியலமைப்பு சட்டத்தை முற்றிலும் மாற்றியமைக்க திட்டமிட்டு வருவதாகவும் தொடர்ந்து குற்றச்சாட்டுக்களை தெரிவித்து வந்த, ராகுல் காந்தியின் இந்த கருத்து பெரும் சர்ச்சையை உருவாக்கியுள்ளது.