ஜனவரி -12, தேசிய இளைஞர்கள் தினத்தையொட்டி AI தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்ட சுவாமி விவேகானந்தர் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளங்கள் மற்றும் இணையத்தில் வைரலாக வருகின்றன.
சுவாமி விவேகானந்தர் கடந்த 1863 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 12 ஆம் தேதி கொல்கத்தாவில் பிறந்தார். நரேந்திர தத்தா என்பது இவரது இயற்பெயர் ஆகும். இந்து இலக்கியங்கள் மற்றும் தத்துவத்தில் தனது சிறுவயது முதலே அதீத திறமை கொண்டவராக திகழ்ந்தார் சுவாமி விவேகானந்தர்.
சிறுவயதிலேயே பல அரிய சாதனைகளை நிகழ்ந்த விவேகானந்தர் மக்களால் மிகவும் கவரப்பட்ட தலைவராகத் திகழ்ந்தார். உலகம் முழுவதும் ஏராளமானவர்கள் அவரது பேச்சுக்களாலும், திறமையாலும் கவர்ந்திழுக்கப்பட்டனர். எனினும், துரதிருஷ்டவசமாக சுவாமி விவேகானந்தர் மிக இளம் வயதில் தனது 39 வது வயதில் 1902 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 4 ஆம் தேதி இயற்கை ஏய்தினார்.
சுவாமி விவேகானந்தரின் பிறந்த நாளான ஜனவரி மாதம் 12 ஆம் தேதி ஆண்டுதோறும் தேசிய இளைஞர்கள் தினமாக கொண்டாடப் பட்டு வருகிறது. இந்நிலையில், தேசிய இளைஞர்கள் தினத்தையொட்டி AI தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்ட சுவாமி விவேகானந்தர் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளங்கள் மற்றும் இணையத்தில் பரவப்பட்டு வைரலாக வருகின்றன.