ஜனவரி-13, உத்தரப்பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் இன்று தொடங்கிய மகா கும்ப மேளாவின் முதல் நாளில் 60 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் திரிவேணி சங்கமத்தில் நீராடி ஆசிபெற்றனர்.
உத்தரப்பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் கங்கை, யமுனை, சரஸ்வதி ஆகிய புண்ணிய நதிகள் சங்கமிக்கும் திரிவேணி சங்கமத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் மகா கும்பமேளா இந்துக்களின் புனித விழாக்களில் மிக முக்கியமான ஒன்றாக கருதப்படுகிறது. மகா கும்பமேளாவில் கலந்து கொள்வதற்காக இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் இருந்து கோடிக் கணக்கான பக்தர்கள் வருவது வழக்கமாக இருந்து வருகிறது.
இந்நிலையில் மகா கும்பமேளா 12 ஆண்டுகளுக்குப் பிறகு இன்று அதிகாலை தொடங்கியது. இதனையொட்டி இன்று காலை 9.30 மணி நிலவரப்படி 60 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் புனிதமான திரிவேணி சங்கமத்தில் நீராடி ஆசிபெற்றனர்.
On the very first day of the #MahaKumbh2025, an extraordinary 60 lakh devotees took a holy dip by 9:30 AM.
— Government of UP (@UPGovt) January 13, 2025
An awe-inspiring confluence of culture, devotion and tradition is unfolding in Prayagraj.#एकता_का_महाकुम्भ pic.twitter.com/rCahZjWp2I
மகா கும்பமேளாவிற்கு வருகை தரும் யாத்திரிகர்களுக்காக பல்வேறு விரிவான பணிகளை உத்தரப்பிரதேச மாநில அரசு மேற்கொண்டுள்ளது.
மகா கும்பமேளாவில் கலந்துகொள்வது மிகுந்த மிகழ்ச்சியைத் தருவதாகவும், நம்பிக்கைக்கு எல்லையே கிடையாது என்றும் கலாச்சாரம் என்பது வார்த்தைகளை விட மிகவும் வலிமையானது என்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணி ஒருவர் தெரிவித்துள்ளார்.
Faith knows no boundaries, and culture speaks louder than words!
— Government of UP (@UPGovt) January 13, 2025
A foreign visitor, speaking in Hindi, shares her joy at the opportunity to take a holy dip in Sangam during #MahaKumbh2025, alongside revered saints.#एकता_का_महाकुम्भ @MahaKumbh_2025 pic.twitter.com/VDcUQytMCj
மகா கும்பமேளா வரும் பிப்ரவரி மாதம் 26 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இதில், 50 கோடி பக்தர்கள் வரை கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.