பிப்ரவரி-16, விழுப்புரம் மாவட்டம் சாலமேட்டில் அமைந்துள்ள அஷ்ட வராகி திருக்கோயில் இழந்த செல்வத்தை மீட்டுத் தரும் தனிச் சிறப்புமிக்க திருத்தலமாகும். இத்திருத்தலத்தின் சிறப்புகளை இந்த பகுதியில் காணலாம்.
பெருமாளின் வராக அவதாரமாக கருதப்படும் வராகி அம்மன் ராஜராஜேஸ்வரி அம்மனின் குதிரைப்படை தலைவியாகவும், பத்மாவதி அம்மனின் காவல் தெய்வமாகவும், சப்த கன்னியரினல் ஒருவராகவும் அறியப்படுகிறார். சாலமேட்டில் அமைந்துள்ள இந்த வராகி அம்மன் கோயிலுக்கு சென்று வழிபட்டால் பிறவி பினி அகலும் என்றும், இழந்த செல்வத்தை மீண்டும் பெறலாம் என்றும் நம்பப்படுகிறது.

பத்மாவதி தாயின் காவல் தெய்வமான அஷ்டவராகி திருக்கோயில் கோயிலில் அஷ்டமா சித்தி தரும் மகா வராகி, ஆதி வராகி, ஸ்வப்னவராகி, லகு வராகி, உன்மத்த வராகி, சிம்ஹாருடா வராகி, மகிஷாருடா வராகி, அச்வாருடா வராகி என அஷ்ட வாராகி அம்மன்களை ஒரே இடத்தில் தரிசிப்பது சிறப்பு வாய்ந்ததாகும்.
உலகிலேயே வராகியம்மனுக்கு அமைக்கப்பட்ட முதல் கோவிலில், வராகி சிலை அத்தி மரத்தால் 8 அடி உயரத்தில் அமைக்கப்பட்டுள்ளது. பஞ்சமி பூஜை இக்கோயிலில் முக்கியத்துவமானதாக கருதப்படுகிறது. வராகி அம்மனுக்கு ஒவ்வொரு மாதமும் வளர்பிறையில் வரும் பஞ்சமி அன்று பஞ்சமி பூஜை நடைபெறுகிறது.
அஷ்டவராகி அம்மன் ஆலயத்தில் மாதம் தோறும் பௌர்ணமி மற்றும் அமாவாசை நாட்களில் அன்னதானத்துடன் சிறப்பாக பூஜைகள் நடைபெற வருகின்றன. விழுப்புரம் பேருந்து நிலையத்திலிருந்து 3 கிலோ மீட்டர் தூரத்தில் சாலமேடு அஷ்டவராகி கோயில் உள்ளது. தளவானூர், திருப்பாச்சனுர் செல்லும் அரசு பேருந்துகளிலும் இக்கோவிலுக்கு எளிதாக செல்ல முடியும்.