பிப்ரவரி-15, பிரதமர் நரேந்திர மோடியின் அமெரிக்க பயணத்தில் இருதரப்பு உறவுகள் குறித்து அமெரிக்க அதிபர் டெனால்டு டிரம்புடன் சந்திப்பு, முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தானது, எலான் மஸ்க், துளசி கபார்டு உள்ளிட்டோருடான சந்திப்பு உள்ளிட்ட இந்தியாவுக்கு சாதகமான பல்வேறு முக்கிய அம்சங்கள் இடம்பெற்றுள்ளன.

அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப கடந்த மாதம் 20 ஆம் தேதி பதவியேற்ற பின் முதன்முறையாக 2 நாள் அரசுமுறைப் பயணமாக பிரதமர் நரேந்திர மோடி கடந்த வியாழக்கிழமை அமெரிக்கா சென்றடைந்தார். வாஷிங்டன் சென்றடைந்த மோடிக்கு, அமெரிக்க வாழ் இந்திய வம்சாவழியினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

இந்த பயணத்தின் போது அமெரிக்க பாதுகாப்பு ஆலோசகர் மைக்கேல் வாட்சை, பிரதமர் மோடி முதலில் சந்தித்து பேசினார். அதனைத் தொடர்ந்து உலகின் மிகப்பெரிய பணக்காரரான எலான் மஸ்கை அவரது இல்லத்தில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.

பின்னர் குடியரசு கட்சியைச் சேர்ந்த இந்திய வம்சாவளி அமெரிக்கரான விவேக் ராமசாமியை பிரதமர் மோடி சந்தித்தார்.

இதனைத்தொடர்ந்து, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பபை, பிரதமர் நரேந்திர மோடி வாஷிங்டனில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

இந்த சந்திப்புக்கு முன் அனைத்து நாடுகளிடையேயும் பரஸ்பர வரிவிதிப்பு கொள்கையை தனது அரசு கடைபிடிக்கும் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்தார். அதாவது அமெரிக்காவிலிருந்து ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களுக்கு சம்மந்தப்பட்ட நாடுகள் எந்த அளவு வரி விதிக்கின்றனவோ அதே அளவு வரி விகிதம் அந்த நாடுகளில் இருந்து அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கும் விதிக்கப்படும் என டிரம்ப் அறிவித்தார்.

பிரதமர் மோடியின் இந்த பயணத்தின் போது அமெரிக்காவிலிருந்து இந்தியாவிற்கு இயற்கை எரிவாயு இறக்குமதி செய்வது உள்ளிட்ட முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. இந்த அமெரிக்க பயணத்தின் போது அமெரிக்காவின் தேசிய புலனாய்வுத் துறை இயக்குனராக பதவியேற்றுள்ள துளசி கபாடையும் பிரதமர் மோடி சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.

அமெரிக்க பயணத்திற்கு முன்னதாக பிரதமர் மோடி இரண்டு நாள் சுற்றுப்பயணமாக பிரான்ஸ் சென்றார்.

அங்கு அங்கு நடைபெற்ற செயற்கை நுண்ணறிவு மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு உறையாற்றினார்.