பிப்-09, டெல்லி சட்டப்பேரவை தேர்தல் வெற்றி உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, மக்கள் சக்தியே முதன்மையானது என்றும் வளர்ச்சி, நல்லாட்சி வெற்றி பெற்றது என்றும் தெரிவித்துள்ளார். டெல்லி சட்டசபை தேர்தலில் பாரதிய ஜனதா கட்சிக்கு வரலாற்று சிறப்புமிக்க வெற்றியை பெற்று தந்த காங்கிரசை மோடி பாராட்டினார்.

27 ஆண்டுகால காத்திருப்புக்குப் பிறகு டெல்லி சட்டசபை தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி 48 இடங்களில் வெற்றி பெற்றது. ஆம் ஆத்மி கட்சி 22 இடங்களை மட்டுமே கைப்பற்றிய நிலையில், காங்கிரஸ் கட்சி ஹாட்ரிக் பூஜ்ஜியத்தைப் பெற்றது. அமோக வெற்றிக்குப் பிறகு பிரதமர் நரேந்திர மோடி டெல்லியில் உள்ள கட்சித் தலைமை அலுவலகத்துக்குச் சென்று ஆயிரக்கணக்கான தொண்டர்கள் மத்தியில் உரையாற்றினார்.

அப்போது, இந்த மகத்தான வெற்றிக்காக இரவு- பகலாக உழைத்த கட்சித் தொண்டர்கள் அனைவரையும் நினைத்து மிகவும் பெருமைப்படுவதாக கூறினார். டெல்லி மக்களுக்கு சேவை செய்வதில் இன்னும் வலுவாக தங்களை அர்ப்பணிப்போம் என்றும், மிகவும் கடினமாக உழைத்த ஒவ்வொரு காரியகர்த்தாவையும் நினைத்து மிகவும் பெருமைப்படுவதாகவும் தெரிவித்தார்.
21वीं सदी की राजनीति को नए आइडिया और नई ऊर्जा की जरूरत है। इसलिए दिल्ली सहित देशभर के नौजवानों से मैं अपना यह आग्रह दोहराना चाहता हूं… pic.twitter.com/bG9NUIayZb
— Narendra Modi (@narendramodi) February 8, 2025
இந்த அற்புதமான மற்றும் வரலாற்று சிறப்பான வெற்றியை அளித்த டெல்லியின் அன்பு சகோதரிகள் மற்றும் சகோதரர்களுக்கு தலைவணங்குவதாகவும், இந்த ஆசீர்வாதங்களைப் பெறுவதில் பெருமை அடைவதாகவும் குறிப்பிட்டார். டெல்லியை வளர்ச்சி அடைய செய்வதிலும், மக்களின் ஒட்டுமொத்த வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதிலும், விக்சித் பாரதத்தை உருவாக்குவதில் டெல்லிக்கு முக்கியப் பங்கு இருப்பதை உறுதி செய்வதிலும் அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வோம் என்றும் உத்தரவாதம் அளித்தார்.

மக்கள் சக்திதான் முக்கியம் என்றும் மோடி கூறிய அவர், வளர்ச்சி வென்றது, நல்லாட்சி வென்றது என்றும், டெல்லிக்கு வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியைத் தேடித்தந்த காங்கிரஸுக்கு வாழ்த்துக்கள் என்றும் தெரிவித்தார். டெல்லி மக்கள் வழங்கிய மகத்தான ஆசீர்வாதங்களுக்கும், அன்புக்கும் மிகவும் நன்றியுள்ளவனாக இருப்பேன் என்றும் அவர் குறிப்பிட்டார்.
‘आप’दा वालों ने अपने हर घोटाले को छिपाने के लिए तरह-तरह की साजिश रची है, लेकिन दिल्लीवासियों को यह मोदी की गारंटी है… pic.twitter.com/YO5DlKWaGw
— Narendra Modi (@narendramodi) February 8, 2025
என்டிஏ என்றால் வளர்ச்சிக்கு உத்தரவாதம் என்றும் நரேந்திர மோடி கூறினார். என்டிஏ என்றால் நல்லாட்சிக்கான உத்தரவாதம். ஏழைகள், நடுத்தர வர்க்கத்தினர் மற்றும் பெண்களின் ஆசீர்வாதமே நமது மிகப்பெரிய பாதுகாப்புக் கவசமாகும் என்பதை டெல்லி நிரூபித்துள்ளது என்றும் பிரதமர் மோடி கூறினார். சுதந்திரத்திற்குப் பிறகு முதல்முறையாக டெல்லி-என்சிஆர் பகுதியில் பாஜக எல்லா இடங்களிலும் ஆட்சியமைப்பது மகிழ்ச்சியான நிகழ்வு என்றும், இது இந்தப் பிராந்தியத்தில் எண்ணற்ற புதிய முன்னேற்றத்திற்கு வழிவகை ஏற்படுத்தும் என்றும் மோடி உறுதிபட தெரிவித்தார்.

எவ்வளவு நேரமும், சக்தியும் தேவைப்பட்டாலும், யமுனை அன்னையை டெல்லி நகரத்தின் அடையாளமாக மாற்றுவது உறுதி என்று மோடி உறுதியளித்தார். ஆம் ஆத்மி கட்சியினர் தங்களின் ஊழல்களை மறைக்க பல்வேறு சதித்திட்டங்களை தீட்டியுள்ளனர். ஆனால், இது டெல்லி மக்களுக்கு மோடியின் உத்தரவாதம். ஒருமுறை காங்கிரஸை யார் கையில் பிடித்தாலும் நாசம் என்பது உறுதி என்பது இன்று டெல்லியிலும் தெளிவாகிவிட்டது என்றும் மோடி கூறினார்.