பிப்ரவரி-08, டெல்லி சட்டப்பேரவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடங்கியுள்ளது. முதல்கட்ட முன்னிலை வெளியாகி வரும் நிலையில், பாரதிய ஜனதா கட்சி ஆத்மி கட்சியை விட அதிக தொகுதிகளில் முன்னிலை பெற்றுள்ளது.
மொத்தம் உள்ள 70 தொகுதிகளில் பாரதிய ஜனதா கட்சி 40 க்கும் மேற்பட்ட இடங்களில் முன்னிலையில் உள்ளது. ஆம் ஆத்மி கட்சி 25 க்கும் மேற்பட்ட இடங்களில் மட்டுமே முன்னிலை பெற்று பின்தங்கியுள்ளது. காங்கிரஸ் கட்சி ஒரே ஒரு இடத்தில் மட்டுமே முன்னிலை பெற்றுள்ளது.
முதற்கட்ட தகவல்களின்படி ஆம் ஆத்மி கட்சியின் முக்கிய தலைவர்களான அரவிந்த் கெஜ்ரிவால், அதிஷி, மணிஷ் சிசோடியா உள்ளிட்ட பலர் பின்தங்கியுள்ளனர்.