பிப்ரவரி-4, இந்திய பங்குச்சந்தைகளில் தொடரும் தடுமாற்றம் நிலவுகிறது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிப்டு இன்று சற்று உயர்வுடன் முடிவடைந்து.
இன்றைய வர்த்தக நேரம் தொடங்கியது முதல் பங்கு சந்தைகளில் சற்று ஏற்ற இறக்கங்கள் காணப்பட்டன. வர்த்தகத்தின் முடிவில் தேசிய பங்கு சந்தை குறியீட்டு எண் நிப்டி 378 புள்ளிகள் உயர்ந்து 23 ஆயிரத்து 739 புள்ளிகளை முடிவடைந்தது.
மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் ஏற்ற இறக்கம் இல்லாமல் 78,583 புள்ளிகளில் முடிவடைந்தது. ஸ்ரீராம் பைனான்ஸ், எல்என்டி, பெல், அதானி போர்ட்ஸ், இண்டஸ் இந்த் பேங்க், டாடா மோட்டார்ஸ், ரிலையன்ஸ், அல்ட்ராடெக் சிமெண்ட் உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் உயர்வை சந்தித்தன.
ட்ரண்ட். பிரிட்டானியா, ஹீரோ மோட்டார் கம்பெனி, நெஸ்லே இந்தியா, ஈச்சர் மோட்டார்ஸ், ஹிந்துஸ்தான் யூனிலீவர், டாட்டா கன்ஸ்யூமர் உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் சரிவை சந்தித்தன.