ஜனவரி-21, இந்திய பங்குச் சந்தைகள் இன்று கடும் சரிவை சந்தித்தன. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 1235 புள்ளிகளும், தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 299 புள்ளிகளும் சரிவடைந்தன.
இன்றைய வர்த்தகத்தின் தொடக்கத்திலிருந்து இந்திய பங்குச் சந்தைகள் தொடர்ந்து இறக்கத்துடன் காணப்பட்டன. தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் 23,000 புள்ளிகளுக்கும் கீழ் சென்றது. அதேபோல், மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 1300 புள்ளிகளுக்கு மேல் சரிவை கண்டது.
இன்றைய வர்த்தகத்தின் முடிவு மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 1,235 புள்ளிகள் அதாவது 1.60 சதவீதம் சரிவை சந்தித்து 75 ஆயிரத்து 838.36 புள்ளிகளில் நிறைவடைந்தது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிப்டி 299 புள்ளிகள் சரிவை சந்தித்து 23, 045.30 புள்ளிகளில் நிறைவடைந்தது.
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், ஐசிஐசிஐ வங்கி, சூமேட்டோ ஆகிய நிறுவனப் பங்குகள் கடும் சரி வைத்து சந்தித்தன. அமெரிக்காவின் புதிய அதிபராக டொனால்டு டிரம்ப் பதவியேற்ற பின் அண்டை நாடுகளுடன் வர்த்தகத்திற்கு 25 சதவீதம் வரி விதித்ததன் காரணமாக பங்குச் சந்தைகளில் மேலும் சரிவு ஏற்பட்டது.
மும்பை பங்குச்சந்தையில் இன்று முதலீட்டாளர்களுக்கு மொத்தம் 7.48 லட்சம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டது. இதனால் மும்பை பங்குச்சந்தையின் மொத்த மதிப்பு 424.11 லட்சம் கோடி ரூபாயாக சரிவடைந்தது. அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 17 பைசா உயர்ந்து 86 ரூபாய் 28 பைசாவாக உள்ளது.
அமெரிக்க அதிபராக டொனால்டு டிரம்ப் பதவியேற்றவுடன் அமெரிக்க பங்குச் சந்தைகள் உயர்வடையத் தொடங்கின. அதேசமயம், பெரும்பாலான ஆசிய பங்குச் சந்தைகள் இன்று சரிவுடன் முடிவடைந்தன.