ஜனவரி-21, புஷ்பா 2 படம் படத்தின் தயாரிப்பு நிறுவனமான மைத்திரி மூவி மேக்கர்ஸ், கேம் சேஞ்சர் படத்தின் தயாரிப்பாளரான தில் ராஜு மற்றும் ஐதராபாத்தில் உள்ள முன்னணி சினிமா தயாரிப்பு நிறுவனங்களில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தினர்.
அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தானா ஆகியோர் நடிப்பில் அண்மையில் வெளியான புஷ்பா 2 திரைப்படம் பெரும் வசூலை அள்ளி குவித்து வருகிறது. தொடர்ந்து இத்திரைப்படத்தின் வசூல் அதிகரித்து வரும் நிலையில் திரைப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ் அலுவலகத்தில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தினர்.
இதேபோல், வாரிசு, கேம் சேஞ்சர் உள்ளிட்ட திரைப்படங்களின் தயாரிப்பாளரான தில் ராஜு வீட்டிலும் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். இதேபோல் ஹைதராபாத்தில் உள்ள முன்னணி சினிமா தயாரிப்பு நிறுவனங்களில் உட்பட 55 இடங்களில் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். ஷங்கர் இயக்கத்தில் ராம்சரண் நடிப்பில் அண்மையில் வெளியானது கேம் சேஞ்சர்ஸ் திரைப்படம்.
மிகவும் எதிர்பார்க்கப்பட்ட கேம் சேஞ்சர் திரைப்படம் மிகப்பெரிய அளவில் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், படத்திற்கான 450 கோடி ரூபாய் செலவையாவது வசூல் செய்யுமா என தயாரிப்பாளர்கள் எதிர்பார்த்துள்ளனர்.