• Tue. Mar 11th, 2025

உரக்கச் சொல்வோம் உலகிற்கு

அமெரிக்க அதிபராக பதவியேற்ற டிரம்ப் அதிரடி!

Donald trump sworn in as US President

ஜனவரி -21, அமெரிக்காவின் 47வது அதிபராக டொனால்ட் ட்ரம் பதவி ஏற்றுக்கொண்டார். புதிய அதிபராக பதவி ஏற்ற டிரம்ப் அமெரிக்காவின் பொற்காலம் தொடங்கி விட்டதாக தெரிவித்துள்ளார்.

அமெரிக்க அதிபருக்கான தேர்தல் கடந்த நவம்பர் மாதம் நடைபெற்றது. மொத்தம் உள்ள 538 பிரதிநிதிகளான தேர்தலில் 312 பிரதிநிதிகளை பெற்று டொனால்ட் ட்ரம்ப் இரண்டாவது முறையாக அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இதனைத் தொடர்ந்து அமெரிக்காவின், 47வது அதிபராக டொனால்ட் ட்ரம்ப் பதவி ஏற்கும் நிகழ்ச்சி தலைநகர் வாஷிங்டனின் வெகு விமர்சையாக நடைபெற்றது. இதில் துணை அதிபராக ஜே.டி. வான்ஸ் முதலில் பதவி ஏற்றுக்கொண்டார். அதனைத் தொடர்ந்து அதிபராக டிரம்ப் பதவி ஏற்றுக்கொண்டார். பதவி ஏற்பு நிகழ்ச்சிக்கு முன் கேப்பிட்டல் பகுதியில் உள்ள தேவாலயத்தில் சிறப்பு பிரார்த்தனை நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில், டொனால்ட் ட்ரம்ப் , துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் உள்ளிட்டோர் குடும்பத்தினருடன் கலந்து கொண்டனர். கடும் பனிப்பொழிவு காரணமாக 40 ஆண்டுகளுக்குப் பிறகு அமெரிக்க அதிபர் பதவியேற்பு விழா உள் அரங்கத்தில் நடைபெற்றது.

பதவியேற்பு நிகழ்ச்சியில் குடியரசு கட்சியின் முன்னாள் அதிபர்கள் மற்றும் ஜனநாயக கட்சி சேர்ந்த முன்னாள் அதிபர்களான பாரக் ஒபாமா, பில் கிளின்டன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். அதேபோல் தற்போதைய துணை அதிபர் கமலா ஹாரிஸ் உள்ளிட்டோரும் இந்த நிகழ்ச்சியில் பங்கு பெற்றனர். இந்தியா சார்பில் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்ஷங்கர் நிகழ்ச்சியில் பங்கேற்றார். அதிபர் பதவியேற்பு நிகழ்ச்சிக்கு பின் பாரம்பரிய முறைப்படி முன்னாள் அதிபரான ஜோ பைடன் மற்றும் அவரது மனைவி ஆகியோரை ஹெலிகாப்டரில் அதிபர் டொனால்ட் டிரம்ப் முறைப்படி அனுப்பி வைத்தார்.

அதிரடிக்கு பெயர் பெற்ற டிரம்ப், பதவியேற்றபின் நாட்டின் தென் எல்லையை மிகவும் பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவிக்கும் கோப்பில் முதல் கையெழுத்திட்டார். அமெரிக்காவில் சட்டவிரோத குடியேறியவர்களை திரும்பி அனுப்பவது, போதைப் பொருள் கடத்திலில் ஈடுபடுபவர்களை தீவிரவாதிகளாக அறிவிப்பது, உலக சுகாதார அமைப்பில் இருந்து அமெரிக்கா வெளியேறுவது, பாரிஸ் சுற்றுச்சூழல் ஒப்பந்தத்தில் இருந்து வெளியேறுவது உள்ளிட்ட முக்கிய கோப்புகளிலும் டிரம்ப் கையெழுத்திட்டார்.

அமெரிக்க அதிபராக பதவியேற்றுள்ள டொனால்ட் டிரம்பிற்கு, பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். அதிபராக பதவியேற்றுள்ள தனது நெருங்கிய நண்பருக்கு வாழ்த்துக்களை தெரிவிப்பதாக குறிப்பிட்டுள்ள அவர், உலகம் முழுமைக்கான எதிர்காலத்திற்காகவும், இருநாடுகளின் நன்மைக்காகவும் மீண்டும் நெருக்கமாக இணைந்து பணியாற்ற விரும்புவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், உக்ரேன் அதிபர் லெவென்ஸ்கி உள்ளிட்ட உலகின் முக்கிய தலைவர்கள் பலரும் டொனால்ட் டிரம்பிற்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.

By VP

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *