ஜனவரி-15, இந்திய ராணுவ தினம் இன்று கொண்டாடப் படுவதையொட்டி வீரர்களின் அர்ப்பணிப்பு மற்றும் தியாகங்களை நினைவு கூர்ந்துள்ள பிரதமர் நரேந்திர மோடி, அரசு ராணுவ வீரர்கள் மற்றும் குடும்பத்தினருடன் எப்போதும் துணை நிற்கும் என உறுதிபட தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் 77 வது ராணுவ தினம் இன்று கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி, பிரதமர் நரேந்திர மோடி, தனது x தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், இந்திய ராணுவ தினமான இன்று, ராணுவ வீரர்களின் தியாகங்களையும், அர்பணிப் பணியையும் பாராட்டுவதாக தெரிவித்துள்ளார். ராணுவ வீரர்கள் நமது எல்லைகளை பாதுகாப்பதோடு மட்டுமல்லாமல், பேரிடர் காலங்களில் மனித நேய பணிகளில் ஈடுபட்டு வருவதையும் குறிப்பிட்டு பாராட்டியுள்ளார்.
கோடிக் கணக்கான இந்திய மக்களின் பாதுகாப்புக்காக நாள்தோறும் பணியாற்றும் தீரமிக்க வீரர்களின் அர்ப் பணிப்பையும் நினைவு கூர்வதாகவும் அவர் தெரிவித்துள்ளார். தங்ளது அரசு ராணுவ வீரர்கள் மற்றும் குடும்பத்தினருடன் எப்போதும் துணை நிற்கும் என உறுதிபட தெரிவித்துள்ளார்.
Our government is committed to the welfare of the armed forces and their families. Over the years, we have introduced several reforms and focused on modernisation. This will continue in the times to come.
— Narendra Modi (@narendramodi) January 15, 2025
கடந்த சில ஆண்டுகளாக ராணுவத்தில் பல்வேறு சீர்திருத்தங்களையும், நவீனப்படுத்துதலையும் அரசு மேற்கொண்டுள்ளதாகவம் நரேந்திர மோடி குறிப்பிட்டுள்ளார்.