ஜனவரி -15, உத்தரப் பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் நடைபெற்று வரும் மகா கும்ப மேளாவையொட்டி நாள்தோறும் கோடிக் கணக்கான பக்தர்கள் திரிவேணி சங்கமத்தில் புனித நீராடி வருகின்றனர்.

புன்னிய நதிகளான கங்கை, யமுனை, சரஸ்வதி கூடும் பிரயாக்ராஜில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை மகா கும்பமேளா நடைபெற்று வருகிறது.

மகா கும்பமேளாவிற்கு இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் இருந்து கோடிக் கணக்கான பக்தர்கள் வருவகை தந்து புனித நீராடி ஆசிபெறுவது வாடிக்கையாக உள்ளது.

மகா கும்பமேளாவின் 3 வது நாளான நேற்று மகர சங்கராந்தி பண்டிகையையொட்டி 3 கோடியே 50 லட்சம் பக்தர்கள் திரிவேணி சங்கமத்தில் புனித நீராடியதாக உத்தரப் பிரதேச மாநில அரசு தெரிவித்துள்ளது.

மகா கும்பமேளாவில் சாதுக்கள், முக்கிய பிரமுகர்கள் உள்ளிட்ட கோடிக் கணக்கானோர் பங்கேற்பர் என்பதால், உத்தரப்பிரதேச மாநில அடிப்படை கட்டமைப்பு வசதிகள் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகளை சிறப்பான வகையில் செய்துள்ளது.

வரும் 29 ஆம் மெளனி அமாவாசை, பிப்ரவரி 3 ஆம் தேதி வசந்த பஞ்சமி, பிப்ரவரி 12 ஆம் தேதி மகி பூர்ணிமா, பிப்ரவரி 26 ஆம் தேதி மகா சிவராத்திரி ஆகிய நாட்கள் கும்பமேளாவில் புனித நீராட முக்கிய நாட்களாகும். இந்நாட்களில் கோடிக்கணக்கான பக்தர்கள் பிரயாக்ராஜில் புனிநீராட வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஜனவரி 13 ஆம் தேதி தொடங்கிய மகா கும்பமேளா வரும் பிப்ரவரி 26 ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. இந்த ஆண்டு கும்பமேளாவில் 50 கோடி பக்தர்கள் புனித நீராட வருவகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.