ஜனவரி -14, இந்திய பங்குச் சந்தைகள் தொடர் சரிவுக்கு மத்தியில் இன்று சற்று உயர்வை சந்தித்தன.
பங்குச் சந்தைகளின் இந்த உயர்வுக்கு நிதி மற்றும் உலோக உற்பத்தி நிறுவனங்களின் சந்தை மதிப்பு உயர்வு முக்கிய காரணமாகும். ஹெச்.டி.எப்.சி வங்கிப் பங்குகள் 1 சதவிகிதமும், எஸ்.பி.ஐ. வங்கியின் பங்கு மதிப்பு 2.6 சதவிகிதமும் உயர்வை சந்தித்தன.
தொடர்ந்து பல வாரங்களாக சரிவை சந்தித்துவந்த உலோக உற்பத்தி நிறுவனங்களின் பங்குகள் 4 சதவிகிதம் உயர்வு பெற்றன. ஹெச்.சி.எல் நிறுவனத்தின் கடந்த காலாண்டு நிதிநிலை அறிக்கை நேற்று வெளியிடப்பட்ட நிலையிலும், மென்பொருள் நிறுவனப் பங்குகள் இன்று சரிவுடன் முடிவடைந்தன.
இன்றைய வர்த்தக நேர முடிவில் தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிப்டி 90 புள்ளிகள் உயர்வை சந்தித்து, 23176.05 புள்ளிகளிலும், மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 169.62 புள்ளிகள் உயர்ந்து 76499.63 புள்ளிகளிலும் முடிவடைந்தன.
அதானி என்டெர்டெய்ண்ட்மெண்ட், அதானி போர்ட்ஸ், ஶ்ரீராம் பைனான்ஸ், என்.டி.பி.சி, ஹிண்டால்கோ உள்ளிட்ட நிறுவனப் பங்குகள் இன்றைய வர்த்தகத்தில் உயர்வுடன் நிறைவடைந்தன. ஹெச்.சி.எல், ஹிந்துஸ்தான் யுனிலீவர், அப்பேல்லோ ஹாஸ்பிடல்ஸ், டைட்டன், இன்போஸிஸ், டாடா கன்ஸ்சல்டன்சி உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் வர்த்தகத்தின் முடிவில் சரிவை சந்தித்தன.
அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் 6 பைசா சரிந்து 86 ரூபாய் 64 பைசாவாக உள்ளது.