• Wed. Mar 12th, 2025

உரக்கச் சொல்வோம் உலகிற்கு

மகர சங்கராந்தி, பொங்கல் கொண்டாட்டத்தில் மோடி பங்கேற்பு!

Delhi Election Results 2025

ஜனவரி-14, டெல்லியில் நடைபெற்ற மகர சங்கராந்தி மற்றும் பொங்கல் கொண்டாட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டார்.

தை மாத பிறப்பையொட்டி நாடுமுழுவதும் இன்று மகர சங்கராந்தி விழா உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டு வருகிறது. அதேபோல், தமிழ்நாட்டில் தை மாத பிறப்பு பொங்கல் பண்டிகையாக கொண்டாடப் பட்டு வருகிறது. இதனையொட்டி, மக்கள் அனைவரும் புத்தாடை அணிந்து, புதுப்பானையில் பொங்கலிட்டு உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.

இந்நிலையில், டெல்லியில் நேற்று மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டி இல்லத்தில் மகர சங்கராந்தி மற்றும் பொங்கல் பண்டிகை வெகு விமரிசையாக நடைபெற்றது. இதில், சிறப்பு விருந்தினராக பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டார்.

இதனை தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள்ள பிரதமர் மோடி, தமது அமைச்சரவை சகாவான கிஷன் ரெட்டி இல்லத்தில் நடைபெற்ற சங்கராந்தி மற்றும் பொங்கல் பண்டிகை கொண்டாட்டங்களில் பங்கேற்றேதாகவும், மிகச்சிறந்த கலாச்சார நிகழ்வையும் கண்டுகளித்ததாகவும் தெரிவித்துள்ளார்.

இந்தியா முழுவதும் உள்ள மக்கள் சங்கராந்தியையும், பொங்கல் பண்டிகையையும் மிகுந்த உற்சாகத்துடன் கொண்டாடி வருவதாகவும், நமது கலாச்சாரத்தின் வேளாண் பாரம்பரியத்தில் ஆழமாக வேரூன்றியுள்ள நன்றியின் கொண்டாட்டமாக விளங்குவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

சங்கராந்திக்கும், பொங்கல் பண்டிகைக்கும் தமது நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்வதாகவும், வரவிருக்கும் அறுவடை பருவத்தில் அனைவருக்கும் மகிழ்ச்சியும், நல்ல ஆரோக்கியமும், வளமும் கிடைக்க வாழ்த்துவதாகவும் கூறியுள்ளார்.

By VP

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *