• Sat. Jul 19th, 2025

உரக்கச் சொல்வோம் உலகிற்கு

துருக்கிக்கு மோடி வைத்த ஆப்பு…நொந்துபோன டிரம்ப்!

PM Narendra Modi

ஜூலை-12, ஆபரேஷன் சிந்தூர் துல்லியத் தாக்குதலின்போது பாகிஸ்தானுக்கு உதவிய துருக்கி நாட்டிற்கு ஆப்பு வைக்கும் விதமாக தனது ஸ்டைலில் பதிலடி கொடுத்துள்ளார் பிரதமர் மோடி.

இஸ்லாமிய அடிப்படைவாதத்தை அடிப்படையாக கொண்டிருக்கும் துருக்கி, பாக்கிஸ்தானுக்கு ‘பைரக்தார்’ ட்ரோன்களை தந்து இந்தியாவுக்கு ‘செக்’ வைக்க முயற்சித்தது.

அந்த ட்ரோன்களை, பலூனை சுடுவதை போல் சுட்டு வீழ்த்திய இந்தியா, இப்போது துருக்கிக்கு ‘செக்’ வைக்க அதன் எதிரி நாடுகளான ‘க்ரீஸ்’ மற்றும் ‘சைப்ரஸுக்கு’ ஆயுதங்கள் வழங்க பேச்சு வார்த்தை நடத்தி வருகிறது. பிரதமர் நரேந்திர மோடி சமீபத்தில் இந்த இருநாடுகளுக்கும் சென்று ‘துருக்கிக்கு’ மறைமுகமான மிரட்டலை வைத்து விட்டு வந்தார்.

தற்போது 1500 கிலோமீட்டர் பயணிக்க வல்லதும், துருக்கியின் ரஷ்ய இறக்குமதி ‘S-400’ வான் தடுப்பு கவசத்திற்கு சிக்காததுமான, இந்தியாவின் ‘Long Range Land Attack Cruise Missile’ (LR-LACM) எனும் அதிபயங்கர ஏவுகணைகளை, கிரீஸுக்கு வழங்குவது குறித்து இந்தியா-கிரீஸ் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இதை சுட்டிக்காட்டி துருக்கிய நாளிதழ்கள், இந்தியாவை பகைத்துக் கொள்வது நமக்கு தேவையா? எனக் கதறிக் கொண்டிருந்தன.

மறுபக்கம் ஏதோ இந்தியா- பாக்கிஸ்தான் மத்தியில் ‘தான்’ தான் சமாதானம் செய்ததாக டொனால்ட் ட்ரம்ப் உருட்ட, ‘வாய்ப்பே இல்லை’ என்று அவரின் மூக்குடைத்தது இந்தியா.
இதனால் வெறுப்படைந்து, இந்தியாவுக்கு செக் வைக்க அதே பாக்கிஸ்தானின் ‘ஃபீல்ட் மார்ஷல்’ ஆசிம் முனீருக்கு விருந்தளித்தார் அமெரிக்க அதிபர் ட்ரம்ப்.

ஆனால் பிரதமர் நரேந்திர மோடி சும்மா இல்லை. அமெரிக்காவின் பொருளாதார தடைகளை எதிர்கொண்டு வரும் அதன் எதிரி நாடான ‘கியூபா’ அதிபருடன் ‘பிரிக்ஸ்’ மாநாட்டின் பின்னணியில், பரஸ்பர நல திட்டங்கள் குறித்தும், உறவுகளை வளப்படுத்துவது குறித்தும் பேசி வந்துள்ளார். கியூபா அதிபர், இந்தியாவின் ஆயுர்வேதம், ‘ஜெனரிக்’ மருந்துகள், UPI பரிவர்த்தனை ஆகியவற்றில் பலத்த ஆர்வம் காட்டியுள்ளார்.

ஆக இந்தியாவிடம் தன் பருப்பு வேகாது என வெறுத்துப் போனாராம் ட்ரம்ப்.

By VP

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *